மாமல்லபுர சிற்பங்களை மின்னொளியில் கண்டு ரசிக்கலாம் : வார இறுதி நாட்களில் இரவு 9 மணி வரை காண அனுமதி

Oct 22 2019 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாமல்லபுர புராதன சிற்பங்களை வார இறுதி நாட்களில் மின்னொளியில் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கலாம் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் திரு.நரேந்திர மோடி இருவரும், கடந்த 11-ம் தேதி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக்கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, அர்ஜூனன் தபசு உள்ளிட்ட வரலாற்று சிற்பங்கள் மறுசீரமைக்கப்பட்டன. கடற்கரைக் கோயில் மின்னொளியில் ஜொலித்தது. இந்த சந்திப்புக்கு பின்னர், தலைவர்கள் ரசித்த மாமல்லபுர சிற்பங்களை காண சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஆனால், சில நாட்களில் கடற்கரை கோயிலில் மின்னொளி ஒளிராததால், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மின்னொளியில் கடற்கரைக் கோயிலை காண ஏற்பாடுகள் செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வார இறுதி நாட்களில் மின்னொளியில் கடற்கரைக் கோயிலை இரவு 9 மணி வரை கண்டு ரசிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மாமல்லபுரத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00