அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி தமிழகம் முழுவதும் கழகம் சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

Oct 22 2019 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றிய கழகம் சார்பில், வானகரம் ஊராட்சிக்‍குட்பட்ட பகுதிகளில் வாகனம் மூலம் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.லக்கி முருகன், வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு.பி. ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் நகர ஒன்றிய கழகம் சார்பில் பாபநாசம் பேருந்து நிலையம், மார்க்கெட் மற்றும் கபிஸ்தலம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.ரெங்கசாமி, பேரூர் கழக செயலாளர் திரு.பிரேம்நாத் பைரவ், ஒன்றிய செயலாளர்கள் திரு.பன்னீர்செல்வம், திரு.மகேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

கடலூர் வடக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.எம்.ஆர். திருமலைவாசன், கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.அக்ரி. பி. முருகேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

தஞ்சை தெற்கு மாவட்ட ஒரத்தநாடு நகரக்‍ கழகம் சார்பில், அண்ணா சிலை அருகே பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. மா. சேகர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகரக்‍ கழக செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், ஒரத்தநாடு வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. சிவ ராஜேஷ் கண்ணன், ஆசைத்தம்பி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3705.00 RS. 4041.00
மும்பை Rs. 3790.00 Rs. 3890.00
டெல்லி Rs. 3785.00 Rs. 3905.00
கொல்கத்தா Rs. 3815.00 Rs. 3955.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.60 Rs. 50000.00
மும்பை Rs. 50.60 Rs. 50000.00
டெல்லி Rs. 50.60 Rs. 50000.00
கொல்கத்தா Rs. 50.60 Rs. 50000.00