குடும்பத்தினரை சிறைபிடித்து போலீசார் மிரட்டல் - திருச்சி லலிதா நகைக்‍கடைக்‍ கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு புகார்

Oct 22 2019 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
தனது குடும்பத்தினரை போலீசார் சிறைபிடித்து வைத்திருப்பதாக, திருச்சி நகைக்‍கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்ற வளாகத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நகைக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் காவல் முடிந்ததால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பான விசாரணைக்காக திருச்சி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சுரேஷ் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுக்க போலீசார் கோரிக்கை வைத்த நிலையில், நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதையடுத்து மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அவரை போலீசார் அழைத்து சென்றனர். தனது குடும்பத்தினரை போலீசார் சிறைப்பிடித்து வைத்துள்ளதாகவும், சரணடைந்தால் அவர்களை விட்டுவிடுவதாக போலீசார் கூறியதாகவும் சுரேஷ் அப்போது தெரிவித்தார். ஆனால் இதுவரை தனது குடும்பத்தினரை போலீசார் விடுவிக்‍கவில்லை என்றும் சுரேஷ் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00