தீபாவளி போனஸ், பண்டிகை முன்பணம் வழங்காததைக் கண்டித்து போக்‍குவரத்து ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு எதிரொலி - போனஸ், முன்பணம் வழங்கப்படுமென தமிழக அரசு திடீர் அறிவிப்பு

Oct 22 2019 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்‍குவரத்துக்‍ கழக ஊழியர்கள் அறிவித்ததை அடுத்து, பண்டிகை முன்பணம் நாளை வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

போக்‍குவரத்துக்‍ கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் இதுவரை போனஸ் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஆண்டும் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த விழாக்காலத்திலும் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட முடியாத போக்குவரத்து ஊழியர்கள், தங்கள் குடும்பத்தினர் பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடு செய்ய முடியாத மனிதாபிமானமற்ற செயலை தமிழக அரசு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். தீபாவளி போனஸ் மற்றும் பண்டிகை முன்பணத்தை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, நாளை அனைத்து பணிமனைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட அறிவிப்பை அடுத்து, பண்டிகை முன்பணம் நாளையும், போனஸ் நாளை மறுநாளும் வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00