இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது உயர்நீதிமன்றம் - 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவு

Oct 22 2019 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் அருகே இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. மாற்றியதோடு, 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியிலுள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம்பெண், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடை உரிமையாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்கள் பணபலம் மிக்கவர்கள் என்பதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, இவ்வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியும், 3 மாதத்தில் வழக்கின் விசாரணையை முடித்து தொடர்புடைய நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். ஏற்கனவே இழப்பீடாக 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00