தீபாவளிக்கு ஆடைகள் வாங்க குவியும் மக்கள் கூட்டத்தில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை - முன்னெச்சரிக்கையாக குற்றவாளிகள் 8 பேர் கைது

Oct 22 2019 7:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
தீபாவளிக்கு ஆடைகள் வாங்க குவியும், மக்கள் கூட்டத்தில் திருட்டு சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குற்றவாளிகள் 8 பேரை போலீசார் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கையாக கைது செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு சில தினங்களே இருப்பதால், புத்தாடைகள் வாங்க தியாகராயநகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதுபோன்ற கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சில திருடர்கள் நகைகள், உடைமைகள் போன்றவற்றை திருடிச் செல்ல முயற்சி செய்வார்கள். இதைத் தடுக்கும் வகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய, வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், விஜய், அந்தோணி, சூரிய பிரகாஷ் உள்ளிட்ட 8 பேரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மக்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00