வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரி வங்கி ஊழியர்கள் போராட்டம்

Oct 22 2019 7:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் மற்றும் புதுச்சேரி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகள் இணைப்புக்கு எதிரான மத்திய அரசு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, வங்கிகள் இணைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொழில் நகரமான தூத்துக்‍குடியில், 300 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் மற்றும் பணப்பரிவர்தனை பாதிக்கப்பட்டதுடன், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

புதுச்சேரியில் 90-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பணப்பரிவர்த்தனை மற்றும் காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும் என்ற பிரதான கோரிக்‍கையை மத்திய அரசுக்‍கு வைப்பதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00