கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளியீடு - கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு கீழடி நாகரீகம் சான்றாய் அமைந்திருப்பதாக தகவல்

Oct 23 2019 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியதற்கு கீழடி நாகரீகம் சான்றாய் அமைந்திருப்பது அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் மத்திய, மாநில தொல்லியல் துறையின் சார்பாக ஐந்து கட்ட அகழாய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வில் பல்வேறு வியக்கத்தக்க தொல்லியல் அடையாளங்கள் கிடைத்த நிலையில், 2-ம் அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டுமானம், நீர் வடிகால் அமைப்பு, தொட்டி போன்ற அமைப்பின் தொடர்ச்சி 5-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், தமிழகத்தில் பல்வேறு அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள வடிகால் அமைப்புக் குழாய்களிலேயே, கீழடியின் கண்டறியப்பட்டுள்ள வடிகால் அமைப்பு வேறுபட்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நகர நாகரிகத்தின் கூறுகளாக செங்கல் கட்டுமானங்கள், வணிகத் தொடர்பு, முன்னேறிய தொழில்நுட்பம், மொழிகளின் பயன்பாடு, மற்றும் எழுத்தறிவு நிலை ஆகியவை தொல்லியல் அறிஞர்களால் பட்டியலிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கூறுகள் கீழடி அகழாய்வில் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கீழடி அகழாய்வில் திறந்த நிலையிலான வடிகால் அமைப்பு, வடிகட்டியுடன் இணைக்கப்பட்ட சுடுமண் குழாய், நீரை பாதுகாப்பாக எடுத்து செல்லும் சுருள் வடிவ குழாய்கள் ஆகிய மூன்று வடிகால் அமைப்புகள் வெளிப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் நீர் மேலாண்மையில் முன்னேறிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதும், இந்த ஆய்வு முடிவுகள் வைகைநதிக்கரையில் அமைந்துள்ள கீழடியில் நகர நாகரிகம் சிறப்புற்று விளங்கியதற்கு மேலும் வலுவூட்டுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00