நடப்பாண்டில், 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை - காவிரி‍ கரையோர மக்‍களுக்‍கு வெள்ள அபாய எச்சரிக்‍கை

Oct 23 2019 8:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேட்டூர் அணை, நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், காவிரிக்‍ கரையோர மக்‍களுக்‍கு வெள்ள அபாய எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால், காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம், அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

நடப்பாண்டில், 2 மாதங்களில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. எனவே, அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும். இதன் காரணமாக, காவிரிக்‍ கரையோர மக்‍களுக்‍கு வெள்ள அபாய எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

தேனி பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில், நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. 57 அடி மொத்த கொள்ளவு கொண்ட மஞ்சளாறு அணை, 53 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00