நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன- வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

Oct 24 2019 6:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதியில் பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதனைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்கு எண்ணிக்கையின் போது 14 மேஜைகள் போடப்பட்டு 22 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற உள்ளது. முன்னணி நிலவரம் குறித்த தகவல்கள் காலை 9 மணி முதல் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் நாங்குநேரி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. மையம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிசிடிவிக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு துவங்கி 11 மேசைகளில் 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்கு துவங்கும் வாக்கு எண்ணிக்கையில் நண்பகலுக்குள் முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00