தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை

Nov 8 2019 11:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி கோவையில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சகண்டி வனப் பகுதியில் காவல் துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனா். இதில் காயமடைந்து வனப் பகுதிக்குள் தப்பிய இருவரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக - கேரள எல்லையான நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தமிழக காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி புதன்கிழமை இரவு கோவை வந்தார். அங்குள்ள காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை, நீலகிரி மாவட்ட எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம், அயோத்தி உள்ளிட்ட சில முக்கிய வழக்குகளின் தீா்ப்பு விரைவில் வெளியாக உள்ளதால் கோவை சரகத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00