சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்‍கால் கரை உடைப்பு - விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களை சூழ்ந்த தண்ணீர்

Nov 8 2019 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, கீழ்பவானி வாய்க்காலின் கரை உடைந்து வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததில், 5 மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலம் சுமார் ஒரு லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் விநாடிக்கு 2 ஆயிரத்து 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாகவும், சத்தியமங்கலம் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு, அருகிலுள்ள வயல்கள் மற்றும் கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனைத் தொடர்ந்து, பவானிசாகர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. கிராம மக்கள் மீட்கப்பட்டு அருகிருந்த திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கும், வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00