மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE பொது நுழைவுத் தேர்வை, தமிழிலும் நடத்த வேண்டும் - தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Nov 8 2019 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் I.I.T. உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான JEE பொது நுழைவுத் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும் என்றும், இதற்குரிய நடவடிக்‍கைகளை பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், மத்திய அரசின் IIT உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்திட வேண்டும் என்றும், இதற்குரிய நடவடிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றோடு, மாநில மொழிகளில் ஒன்றான குஜராத்தியில் மட்டுமே JEE Main நுழைவுத் தேர்வினை எழுதுவதற்கான வசதி தற்போது இருக்கிறது - இதுகுறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து இத்தேர்வினை நடத்தும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்திருக்கிறது - அதில், குஜராத் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே குஜராத் மொழியிலும் இத்தேர்வு நடத்தப்படுவதாகவும், மற்ற மாநில அரசுகள் இது குறித்து எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது என திரு. டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற கனவு இன்னும் நம்முடைய ஏழை, எளிய மாணவச் செல்வங்களுக்கு எட்டாக்கனியாக இருக்கிற நேரத்தில், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மொழியிலும் அதற்கான நுழைவுத் தேர்வினை நடத்துவதற்கான கோரிக்கையை உடனடியாக பழனிசாமி அரசு தேசிய தேர்வு முகமையிடம் வைத்திட வேண்டும் என திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் வரும் 2020-ஆம் ஆண்டு முதலே தமிழ் வழியாக JEE Main நுழைவுத்தேர்வினை தமிழக மாணவர்கள் எழுதுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதனால் மிகக் குறைந்த அளவே தமிழக அரசின் மாநில பாடத்திட்டம் வழியாக படித்த மாணவர்கள் IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் தற்போதைய நிலையை மாற்றிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் NTA அளித்திருக்கும் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற இன்னொரு நுட்பமான செய்தியையும் பழனிசாமி அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் - அதாவது, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிற பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் JEE நுழைவுத் தேர்வின் வழியாக நடத்துவதற்கு முன்பு ஒப்புக்கொண்ட குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், அம்முடிவை 2016-ஆம் ஆண்டோடு கைவிட்டு விட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களே தேசிய பொது நுழைவுத்தேர்வின் வழியாக மாநிலங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து, அதிலிருந்து வெளியேறி இருப்பதைப் பழனிசாமி அரசு புரிந்துகொண்டு, எந்த சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் அப்படியோர் நிலை வருவதற்கு ஒப்புக் கொள்ளக்கூடாது என திரு. டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00