சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் டி.ஜி.பி.யே பொறுப்பேற்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

Nov 8 2019 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு காவல்துறை டி.​ஜி.பி.யே பொறுப்பு என, சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

சிலைக்கடத்தல் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை என தமிழக அரசுக்கு எதிராக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி திரு. பொன் மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் கூடுதல் டிஜிபி ஒருவர் தலையிடுவதாகவும், சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாகவும் திரு.பொன் மாணிக்கவேல் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நீதிமன்றம் பொங்கிஷங்களை காப்பாற்ற வேண்டும் என்று செயல்படுகிறதே தவிர எந்த அதிகாரிகளுக்கு எதிராகவும் செயல்படவில்லை என்றும், உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு டிஜிபியே பொறுப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்‍கு விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00