கடலூரில் தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் இணைந்தனர்

Nov 9 2019 11:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
கடலூரில், தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர், அக்கட்சியில் இருந்து விலகி, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தில் இணைந்தனர்.

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, கடலூர் வடக்கு மாவட்டம் நல்லூர் தெற்கு ஒன்றியம் பாசிகுளம் கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர், அக்கட்சியில் இருந்து விலகி, கடலூர் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. அக்ரி பி. முருகேசன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியின்போது, நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. எஸ். கண்ணன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜா பழனிவேல், மாவட்ட அவைத் தலைவர் திரு. கே.பி. கலையரசன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்குசாவடி முகவர்களுக்கான செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகூட்டம் கடத்தூரில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் திரு. டிகே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு பி. பழனியப்பன் பங்கேற்று, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில், கைப்பேசி மூலம் கழகத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை எப்படி கையாளுவது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். இக்கூட்டத்தில், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில தலைவர் திரு. ஆர். பாலு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு. எம்.ஜி. சம்பத் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00