மாமல்லபுரத்தை பாதுகாத்து அழகுபடுத்த எடுக்‍கப்படவுள்ள நடவடிக்‍கைகள் என்ன? - மத்திய, மாநில அரசுகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Nov 11 2019 7:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
புராதன நகரமான மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து, புகைப்பட ஆதாரத்தோடு மத்திய மற்றும் மாநில அரசுகள், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தை நிரந்திரமாக பாதுகாக்கக்கோரி, கடந்த 1-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு, நீதிபதி கிருபாகரன் கடிதம் அனுப்பி இருந்தார். இதில், மாமல்லபுரத்தை புராதன கிராமமாக அறிவித்து அகழ்வாய்வு பணிகளை தொடர வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை வலியுறுத்தி இருந்தார். நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு இந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்‍கை பதிவு செய்தது. இந்த வழக்‍கு இன்று விசாரணைக்‍கு வந்த நிலையில், மாமல்லபுரத்தை நிரந்திரமாக பாதுகாக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00