பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு : அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Nov 11 2019 7:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதி, சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது, பேனர் சரிந்து விழுந்ததில், நிலை தடுமாறி விழுந்ததில், பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக, அதிமுக நிர்வாகி ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரது ஜாமின் மனுவையும், சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்ததையடுத்து, இருவரின் தரப்பிலிருந்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், சென்னை கேன்சர் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு உத்தரவிட்டார். மேலும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு, ஜெயகோபாலுக்கு ஜாமின் வழங்கினார். மேகநாதனுக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி, பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00