புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் ரவுடி படுகொலை தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
Nov 11 2019 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் நேற்றிரவு அன்பு ரஜினி என்ற ரவுடி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் நேற்று இரவு காரில் வந்த ரவுடி அன்பு ரஜினியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதனிடையே ஸ்ரீராம், ஜெரோன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்றிரவு நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி பதிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்கள் கொலையை அரங்கேற்றி விட்டு தப்பிச் செல்லும் பதிவுகள் வெளியாகியுள்ளன.