உதகையில் வசிக்கும் படுகர் இன மக்களின் 'ஒச அணா' பண்டிகை : பாரம்பரிய உடையணிந்து நடனமாடி கொண்டாட்டம்

Nov 11 2019 9:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் உதகையில் வசிக்கும் படுகர் இன மக்களால் நடத்தப்படும் 'ஒச அணா' பண்டிகை, வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

மலை மாவட்டமான நீலகிரியில், தொதநாடு, பொரங்காடு, மேற்குநாடு ஆகிய பகுதிகளில், சுமார் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில், படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், மேற்கு நாடு சீமையில், 33 கிராமங்களில், படுகர் இன மக்கள் வாழ்கின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயர்கள், இந்த பகுதியில், சிக்கண்ணதுரை என்பவரை வைத்து, நிலங்களுக்கு வரி வசூல் செய்து வந்தனர். இதற்காக, பாலசெவனன் என்பவரை, கிராம நிர்வாக அலுவலராக நியமித்து, அதற்கு சான்றாக, அரசு முத்திரை ஒன்றையும் வழங்கி உள்ளனர். அந்த முத்திரை, பாலகொலா கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் 'ஒச அணா' பண்டிகையில் வைத்து பூஜை செய்வதை, படுகர் இன மக்கள் இன்றளவும் கடைபிடிக்கின்றனர். அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், பாலசெவனன் குடும்பத்தின் 12-வது தலைமுறையைச் சேர்ந்தவர், கிராம முக்கியஸ்தர்களுடன் இணைந்து, அரசு முத்திரையை, அங்கிருந்த கோயிலுக்கு எடுத்துச்சென்று, சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து, அக்காலத்தில் வழங்கப்பட்ட குண்டுமணியும், அரசு முத்திரையும், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர், 33 கிராமங்களைச் சேர்ந்த ஊர் தலைவர்கள், தங்களது நிலங்களுக்கு ஏற்ப, வரி செலுத்தி, அரசு முத்திரையை வணங்கி, ஆசி பெற்றனர். வரி செலுத்தும் நிகழ்வு முடிந்ததும், படுகர் இன மக்கள், தங்களுடைய பாரம்பரிய உடையணிந்து, நடனமாடி மகிழ்ந்தனர். இந்த ஆண்டுக்கான 'ஒச அணா' பண்டிகை நிறைவடைந்ததால், வரும் நாட்களில், அறுவடை பணிகள் தொடங்கப்படும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00