அ.இ.அ.தி.மு.க. அரசு காவல்துறைக்கு தகவல் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் : உரிய விசாரணை நடத்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்

Nov 14 2019 6:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.இ.அ.தி.மு.க. அரசு, காவல்துறைக்கு தகவல் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடத்தப்பட்டு இருப்பது குறித்து, உடனே உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு.வைகோ வெளியிட்டுள்ள அறிக்‍கையில், தமிழக காவல்துறைக்‍கு தகவல் தொடர்பு கருவிகள் வாங்கியதில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக The Times of India நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையை சுட்டிக்‍காட்டியுள்ளார்.

இந்த ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு அதில் அடிப்படை உண்மை இருப்பதாக காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே.இராசேந்திரனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள வைகோ, இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத டி.ஜி.பி., அதனை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் அசோக்குமார் தாஸிடம் ஒப்படைத்துச் சென்றதையும் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

புதிய டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதியும், ஊழல் ஒழிப்புத் துறை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார் - இந்த மெகா ஊழல் குறித்து விசாரணை நடத்த, செப்டம்பர் மாதம் கண்காணிப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குநரகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டது - ஆனால் டி.வி.ஏ.சி. இன்னும் விசாரணையை தொடங்காமல் அலட்சியமாக இருப்பதற்கு என்ன காரணம்? ஊழலுக்‍கு காரணமானவர்கள் யார்? - ஊழலை மூடி மறைக்க முயற்சிப்பவர்கள் யார்? - அவர்கள் மீது ஏன் நடவடிக்‍கை எடுக்‍கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ள திரு.வைகோ, ஊழலில் ஊறித் திளைத்துக் கிடக்கின்ற அ.இ.அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பட்டியலில் இதுவும் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை அளிப்பதற்கு, அ.இ.அ.தி.மு.க. அரசு, காவல்துறைக்கு தகவல் தொடர்புக் கருவிகள் வாங்கியதில் 350 கோடி ஊழல் நடத்தப்பட்டு இருப்பது குறித்து, உடனே உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என திரு.வைகோ வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00