மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலேயே நின்று மாமூல் வாங்கிய தலைமை காவலர் - கேமராவில் சிக்கி பணியிட மாற்றம்
Nov 16 2019 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலமோசடி புகாரில் சிக்காமல் இருக்க, தலைமை காவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. நில மோசடி புகாரில் சிக்கிய சாயல்குடி ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், விசாரணைக்காக ராமநாதபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவரிடம் வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க தலைமைக் காவலர் தர்மர் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து தொழிலதிபர் லஞ்சம் கொடுக்கும்போது அதனை தலைமை காவலர் தர்மர் காவல்நிலைய வளாகத்திலேயே பெற்றுக்கொள்கிறார். இந்த சம்பவத்தை அங்கிருந்த சக காவலர்கள் வீடியோ பதிவு செய்து புகார் அளித்ததன் பேரில், லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் தர்மர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.