மதுரை அருகே பழுதுபார்க்காமல் கிடந்த சாலை - அரசு நடவடிக்கை எடுக்காததால் களத்தில் இறங்கிய மக்கள்
Nov 16 2019 11:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை அருகே சாலை வசதி கேட்டு மக்கள் போராடி வரும் நிலையில், அரசு செவி சாய்க்காத காரணத்தால் தங்களது சொந்த செலவில் கிராம மக்கள் சாலை அமைத்துள்ளனர். அலங்காநல்லூர் அருகே உள்ள வாடிப்பட்டி சாலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது டி. நாரயணபுரம் கிராமம். இங்கு பொதுப்பாதை இன்றி பொதுமக்கள் அவதியுற்று வந்த நிலையில் பலமுறை ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் பலனில்லாததால் மக்களே களத்தில் இறங்கினர்.