அயோத்தி நில வழக்கு : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம்

Nov 16 2019 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி நில வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்‍கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரில், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்டோரை, போலீசார் கைது செய்தனர். அப்போது தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை அருகில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில், போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்‍கும் மேற்பட்டோர், பாஜக அரசுக்‍கு எதிராக கண்டன முழக்‍கங்களை எழுப்பியதுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பினை மறு ஆய்வு செய்யவும் வலியுறுத்தினர்.

புதுச்சேரி சுதேசி மில் அருகில், தடையை மீறி பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3602.00 RS. 3782.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3685.00 Rs. 3805.00
கொல்கத்தா Rs. 3718.00 Rs. 3858.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.90 Rs. 46900.00
மும்பை Rs. 46.90 Rs. 46900.00
டெல்லி Rs. 46.90 Rs. 46900.00
கொல்கத்தா Rs. 46.90 Rs. 46900.00