மெரினா கடற்கரையில் மீன் கடைகள் அமைக்கும் விவகாரம் : விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு இறுதி வாய்ப்பு

Nov 16 2019 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
மெரினா கடற்கரையில் மீன் கடைகள் அமைக்கும் விவகாரத்தில், விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு இறுதி வாய்ப்பு வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது மற்றும் அங்குள்ள மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் திரு. சத்தியநாராயணன் மற்றும் திரு. நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகள் சட்டத்தின்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கணக்கெடுப்பு மற்றும் அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். வாதங்களைக்‍ கேட்டறிந்த நீதிபதிகள், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகள் கடமை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும், இந்த சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நவம்பர் 26 ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி இறுதி வாய்ப்பு வழங்கி மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00