மீண்டும் குவாரி அமைக்‍க அனுமதி கோரி பி.ஆர்.பி. நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை

Nov 16 2019 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
மீண்டும் குவாரி இயக்க அனுமதி வழங்கக்கோரி பிஆர்பி கிரானைட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவன பங்குதாரர் திரு.செந்தில்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். கிரானைட் ஏற்றுமதிக்கு தடை விதித்தும், வங்கிக்கணக்குகளை முடக்குமாறும் காவல்துறை அதிகாரி அனுப்பிய கடிதம், மதுரை மாவட்ட குவாரிகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும், துறைமுகங்களுக்கும், வங்கிகளுக்கும் விளக்க கடிதம் அனுப்ப காவல்துறை அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். மேலும், பிற கிரானைட் குவாரிகளிலிருந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து கிரானைட் கற்களை கொள்முதல் செய்து மெருகூட்டி ஸ்லாபுகளாகவும், டைல்சுகளாகவும் மாற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்யவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திரு.இளந்திரையன், குவாரிகளின் முறைகேடு காரணமாக அரசுக்கு 4 ஆயிரத்து 124 கோடியே 14 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டினார். இதே கோரிக்கையை ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், மீண்டும் இதே கோரிக்கைக்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை நாடியுள்ள மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00