தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : ஏராளமானோர் பங்கேற்பு

Nov 17 2019 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

தேனி நகர் கழகம் மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்‍ கூட்டம், தேனி மாவட்ட கழக செயலாளர் திரு. முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. வரும் உள்ளாட்சி தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்‍க பாடுபடுவது என கூட்டத்தில் உறுதிமொழி ஏற்றுக்‍கொள்ளப்பட்டது. இதில் கழக அமைப்பு செயலாளர் திரு. கதிர்காமு, தேனி நகர் கழக செயலாளர் திரு. காசிமாயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், துவரங்குறிச்சியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கூட்டத்தில், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ஆர்.மனோகரன் பங்கேற்று, உள்ளாட்சி தேர்தல் குறித்து, கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், வரும் 22-ஆம் தேதி திருச்சிக்‍கு வருகைதரும் கழக பொதுச்செயலாளாருக்கு, உற்சாக வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய கழக செயலாளர் திரு. பெருமாள், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. செங்குட்டுவன் கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக்‍ கூட்டம், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.கே.கே. உமாதேவன் தலைமையிலும், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திரு. தேர்போகி V. பாண்டி, கழக இளைஞர் அணி இணைச் செயலாளர் இறகு சேரி முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம், மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு.புவனேஸ்வரன், கழக அமைப்பு செயலாளர் திரு.ஹென்றிதாமஸ் ஆகியோர் தலைமையில் இந்தக்‍ கூட்டம் நடைபெற்றது. இதில், உள்ளாட்சி தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தில் ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00