பவானி சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்‍கு - பரிசலில் பயணம் செய்யவும், குளிக்‍கவும் தடை விதிப்பு

Nov 17 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்‍கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை எட்டிய நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 8 ஆயிரத்து 200 கன அடிக்கும் மேல் உபரி நீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவி மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், தற்காலிக கடைகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளதால் கொடிவேரி அணைப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் பவானி ஆகிய நான்கு தாலுகாக்களில், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00