மாணவி ஃபாத்திமா வழக்கு குறித்த விசாரணைக்கு எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் : மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்

Nov 17 2019 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமா வழக்‍கு குறித்த விசாரணைக்‍கு, எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் என, கேரளா செல்வதற்கு முன் மாணவியின் தந்தை திரு. அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக, மாணவியின் தந்தை திரு. அப்துல் லத்தீபிடம், மத்திய குற்ற பிரிவு போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த திரு. அப்துல் லத்தீப், தனது மகள், தற்கொலைக்‍கு தூண்டப்பட்டுள்ளதாகவும், கைப்பேசியில் உள்ள தனது மகளின் மரண வாக்‍குமூலம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், தெரிவித்தார்.

இதனிடையே நேற்று, மாணவியின் மரணம் தொடர்பாக மத்திய உயர்கல்வித்துறை செயலர் திரு. சுப்பிரமணியம் விசாரணை செய்வதற்காக சென்னை வந்ததாக தகவல் பரவியது. ஆனால், மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மத்திய உயர்கல்வி துறை செயலர் விசாரணை மேற்கொள்வதாக பரவிய வதந்தி பொய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மகள் ஃபாத்திமா வழக்‍கு குறித்த விசாரணைக்‍கு, எப்போது வேண்டுமானாலும் ஒத்துழைப்பு அளிப்பேன் என, சொந்த ஊரான கேரளா செல்வதற்கு முன் மாணவியின் தந்தை திரு. அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00