திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு : 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Nov 19 2019 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் இரண்டாம்நிலை பெண் காவலர் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில், காவல்துறையில் உள்ள 2 ஆயிரத்து 465 இரண்டாம்நிலைக் காவலர்கள் உட்பட 8 ஆயிரத்து 826 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, கடந்த செப்டம்பர் மாதம் 25ம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு, திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. உடல்தகுதிதேர்வுக்கு ஆயிரத்து 251 பேருக்கு அழைப்பாணை அனுப்பபட்டு, நேற்று 634 பேர் பங்கேற்றனர். மீதமுள்ளவர்களுக்கு இன்றும் உடல் தகுதித் தேர்வு நடைபெறுகிறது.