மானிய ஸ்கூட்டர் வழங்குவதாகக்‍ கூறி ஏமாற்றிய அரசு : ஓ.பி.எஸ். போட்டோவுக்‍கு போஸ் கொடுத்துச் சென்றதாக மாற்றுத்திறனாளி அ.தி.மு.க. நிர்வாகி வேதனை

Nov 20 2019 5:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் கூடலூர் அருகே, அரசு விழாவில் ஸ்கூட்டர் வழங்குவதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, மாவட்ட நிர்வாகத்தினரும், ஓ.பி.எஸ்.-ம் தன்னை ஏமாற்றி விட்டதாக, மாற்றுத் திறனாளி அதிமுக நிர்வாகி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு செயலாளராக உள்ள கலுவன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்‍கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தனது வலது காலை இழந்தார். இந்தநிலையில் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா ஸ்கூட்டர் திட்டத்தின் கீழ், இவருக்‍கு ஸ்கூட்டர் வழங்குவதாக அக்‍கட்சியினர் தெரிவித்துள்ளனர். மாண்புமிகு அம்மா-வின் பிறந்த நாள் விழாவையொட்டி தேனியில் நடைபெற்ற அரசு விழாவில், ஓ.பி.எஸ் இவருக்‍கு அடையாளமாக ஸ்கூட்டர் வழங்கியுள்ளார். ஆனால், இந்நிகழ்ச்சி முடிந்து எட்டு மாதங்களாகியும் இதுவரை கலுவனுக்‍கு ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இது குறித்து அக்‍கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வட்டாட்சியருக்‍கு பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை. தொடக்‍க காலத்தில் இருந்தே கட்சியில் இருக்‍கும் தனக்‍கு ஏற்பட்ட அவல நிலை குறித்து, அவர் அதிருப்தி தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00