கோவை மேட்டுப்பாளையம் அருகே, கொட்டும் மழையால் வீடுகளின் சுவர் இடிந்த விபத்து - பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு - மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை
Dec 2 2019 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, கனமழை காரணமாக வீடுகள் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற இடத்தில், ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதனால் அடுத்தடுத்து 4 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் சுமார் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பலியானதால், உயிரிழப்பு 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.