தொடர் மழையால், தமிழகத்தின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் - பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிப்பு

Dec 2 2019 11:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால், குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்‍களின் இயல்பு வாழ்க்‍கை பாதிக்‍கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கடலோரப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இதையடுத்து, வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர், ஏரல், முக்காணி போன்ற பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படுள்ளது. எனவே, யாரும் ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆற்றின் கரை ஓரங்களில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் , கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குன்னூர்-மேட்டுபாளையம் மலை ரயில் சேவை 3-ம் தேதி வரை ரத்து செய்ய பட்டுள்ளதாக தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இத்துடன் மலைப்பாதையில் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் எதிரே வரும் வாகனம் கூட தெரியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்‍குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சில அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு கரையோர மக்‍களுக்‍கு வெள்ள அபாய எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணை நிரம்பியதால் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதேபோன்று குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பழைய குற்றாலத்தில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிக்கப்படவில்லை.

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, சேது பாவசத்திரம் பகுதியில் உள்ள காட்டாற்றில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரியகோட்டை அருகே உள்ள காடந்தாங்குடி கண்ணாற்றில் கரை உடைந்து அருகில் இருக்கும் விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிளான தம்மம்பட்டி, கொல்லிமலை, பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் 10 ஆண்டுகளுக்கு பிறகு கெங்கவல்லி சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம், மரக்காணம், வானூர், விக்கிரவாண்டி, கண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ள நிலையில், திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணை நிரம்பியது. அணையின் முழு கொள்ளளவான 32 அடியில் 31 அடியை எட்டியது. இதனைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பை கருதி வீடூர் அணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைக்கு விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 605 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00