எழும்பூர் கண் மருத்துவமனையில் மரங்களை வெட்டி புதிய கட்டடம் கட்டுவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்‍கு - மரங்களை அழித்து சென்னையை டெல்லி நகரமாக மாற்ற அனுமதிக்‍க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து

Dec 2 2019 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையின் இதயம்போல் இருக்கும் பசுமையான காடுகள், கான்கிரீட் காடுகளாக மாறிவருவதால், டெல்லியாக சென்னையை மாற்றி விட வேண்டாம் என, உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளின் வசதிக்காக 4 ஏக்கர் பரப்பளவில், கூடுதல் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டது. மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு திரு. வினித் கோத்தாரி, திரு. ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்‍கு வந்தது. அப்போது, மருத்துவமனை வளாகத்தில் 25 மரங்கள் மட்டுமே அகற்றப்பட்டு, அவற்றை மாற்று இடத்தில் நட இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. பழமையான மரங்களை வேறொரு இடத்திற்கு மாற்றினால், அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சென்னையின் இதயம்போல் இருக்கும் பசுமையான காடுகள், கான்கிரீட் காடுகளாக மாறிவருவதால், டெல்லியாக சென்னையை மாற்றி விட வேண்டாம் என தெரிவித்தனர். மரங்களை வெட்டாமல், வளாகத்தில் உள்ள மாற்று இடத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை நாளை மறுநாளைக்‍கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00