பெரம்பலூர் அருகே, கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
Dec 2 2019 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெரம்பலூர் அருகே கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர், பச்சை மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக, பெரம்பலூரில் உள்ள கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அரும்பாவூர், பெரியம்மாபாளையம், தழைநகர், கிருஷ்ணாபுரம், பூலாம்பாடி, வேப்படி, பாலக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கல்லாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனையை மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்ட நோயாளிகளை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.