பதவி நீட்டிப்பு கேட்டு பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கு - விசாரணைக்‍கு இடைக்‍கால தடை விதிக்‍க உச்சநீதிமன்றம் மறுப்பு

Dec 2 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிலைக்‍ கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிப்பு செய்ய பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கிற்கு தடை விதிக்‍க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

சிலைக்‍கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாக பொன் மாணிக்‍கவேலுக்‍கு நீதிமன்றம் பதவி நீட்டிப்பு வழங்கி இருந்தது. இந்த நிலையில், பொன் மாணிக்‍கவேல் பதவி நீட்டிப்புக்‍கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்த புதிய மனு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. பொன் மாணிக்‍கவேல் துறை சார்ந்த அதிகாரிகளுக்‍கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் அவர் சிலைக்‍ கடத்தல் வழக்‍கு தொடர்பான ஆவணங்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்‍க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பொன் மாணிக்‍கவேலுவின் பதவிக்‍காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிந்துவிட்டதாகவும் அதில் தெரிவிக்‍கப்பட்டிருந்தது.

இந்த வழக்‍கு நீதிபதிகள் திரு. அசோக்‍ பூஷன், திரு. எம்.ஆர். ஷா முன்னிலையில் விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள் சிலைக்‍ கடத்தல் தடுப்பு தொடர்பான விசாரணை ஆவணங்களை உயரதிகாரிகளுக்‍கு வழங்கவேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள் பதவி நீட்டிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் மாணிக்‍கவேல் தொடர்ந்த வழக்‍கிற்கு இடைக்‍கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00