திருச்சியில் வீடுகளின் முன்பு வரையப்பட்டுள்ள மர்ம குறியீடு : வடமாநில கொள்ளையர்கள், கொள்ளையடிப்பதற்காக வரைந்த அடையாளமா? என பொதுமக்கள் அச்சம்

Dec 11 2019 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் துறையூரில் வீடுகளின் முன்பு மர்ம குறியீடு இருப்பதால், இது கொள்ளையடிப்பதற்கான அடையாளமா? என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

துறையூரில் உள்ள பெரியார்நகர் மற்றும் சாமிநாதன் நகர் பகுதி தெருக்களில் பொதுவாக ஆள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இப்பகுதி​யில் பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் அடிக்கடி வெளியூர் செல்பவர்களின் வீடுகளை மர்ம நபர்கள் கண்காணித்து, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்‍கு முன்பு சாமிநாதன் நகரில் 5 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், பெரியார் நகரில் வசித்துவரும் வழக்கறிஞர் ரபிக் என்பவர் வீட்டில், வட்ட குறியீடு குறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் வீட்டிலும் குறியீடு குறிக்கப்பட்டுள்ளது. இவை வடமாநில கொள்ளையர்கள் வரைந்துள்ள குறியீடாக இருக்‍கலாம் என பொதுமக்‍கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்‍கள் அச்சமின்றி நடமாட காவல்துறையினர் நடவடிக்‍கை எடுக்‍க வேண்டுமென கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00