அ.ம.மு.கழகத்தின் அமைப்புகளுக்கும், மாவட்டம், பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகள் : தலைமைக்கழகம் அறிவிப்பு

Dec 11 2019 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்புகளுக்கும், மாவட்டம், பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் புதிய நிர்வாகிகளை, தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் விவசாயப் பிரிவு இணைச் செயலாளராக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. C. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவராக திரு. கே.என். ஜெயசேகர், மாவட்டச் செயலாளராக திரு. கே. சந்தானகிருஷ்ணன், செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழக அவைத்தலைவராக திரு. T.C. செல்லமணி, மாவட்டச் செயலாளராக திரு. ம. கரிகாலன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட பழனி ஒன்றியம், பழனி கிழக்கு, பழனி மேற்கு என, கழக அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக திரு. என். துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில், திருவோணம் ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. என்.எஸ். நடேஷ், சேதுபாவா சத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளராக திரு. ஏ. அப்துல் ஹமீது, மதுரை புறநகர் வடக்கு மாவட்டத்தின்கீழ், திருப்பாலை பகுதிக் கழகச் செயலாளராக திரு. ஏ.வி. கர்ணாமூர்த்தி, அலங்காநல்லூர் ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. இரா. கோடீஸ்வரன், வாடிப்பட்டி பேரூர் கழகச் செயலாளராக இரா. மதன், திருச்சி வடக்கு மாவட்டக் கழக அவைத்தலைவராக திரு. கோமாகுடி பா. ரவி, திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர் ஒன்றியக் கழகச் செயலாளராக குரும்பேரி மணிகண்டன் என்கிற ஆர். திருமாறன், நன்னிலம் வடக்கு ஒன்றியச் செயலாளராக திரு. எஸ். கதிர்செல்வன், நன்னிலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. கே. பிச்சைக்கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளராக திரு.B. பெரியசாமி, சேந்தமங்கலம் ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. எம். முருகேசன், மோகனூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. எஸ். நடராஜன், கொல்லிமலை ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. கே.சி. ரவிச்சந்திரன் ஆகியோரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகப் பொருளாளராக திரு. P. செல்லதுரை, கோவில்பட்டி மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. வி. ஜெயசங்கர், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளராக திரு.D. சந்திரசேகர், புதூர் ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. வி. கண்ணன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவராக திரு. இ. பொன்பாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மேற்கு மாவட்டத்தில், மாதனூர் ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. ஏ.எஸ். ஜெயவேல், கந்திலி ஒன்றியக் கழகச் செயலாளராக திரு. ஏ.சிவா என்கிற சிவகுமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நிர்வாகிகளுக்கு, கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00