மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை - தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு செய்யப்பட்ட சான்றிதழை வைத்து வணங்கினார்

Dec 11 2019 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு பெற்றதையடுத்து, மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் கழக பொதுச்செயலளார் திரு.டிடிவி தினகரன், கட்சி பதிவு பெற்ற சான்றிதழை வைத்து ஆசி பெற்றார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அதிகாரப்பூர்வ கட்சியாக பதிவு செய்யப்பட்டது. இதனை, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக்‍ கொண்டாடி வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் பதிவு பெற்றதையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில், கழக பொதுச்செயலளார் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார். மேலும், கட்சி பதிவு பெற்ற சான்றிதழை வைத்து ஆசி பெற்றார்.

இந்த நிகழ்வில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை தலைவர் திரு.அன்பழகன், துணை பொதுச்செயலாளர் திரு.பழனியப்பன், பொருளாளர் திரு. வெற்றிவேல், தலைமை நிலைய செயலாளர்கள் திருச்சி திரு.ஆர்.மனோகரன், திரு.கே.கே.உமாதேவன், கொள்கை பரப்பு செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி, எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு.கா. டேவிட் அண்ணாதுரை, அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00