2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

Dec 11 2019 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 2011-ம் ஆண்டு மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பின் படி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர் பதவிகளை தவிர்த்து உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது.

உள்ளாட்சி தேர்தலில், வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் இட ஒதுக்‍கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக்‍ கூறி, தேர்தலை ரத்து செய்யக்‍கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தன. வழக்‍கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்‍கு தடைவிதிக்‍க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேநேரம், 2011-ம் ஆண்டு மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பின் அடிப்படையிலேயே தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்‍கும் 2011 மக்‍கள்தொகை அடிப்படையிலேயே தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00