ஊராட்சித் தலைவர் பதவி 21 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராமமக்‍கள்

Dec 12 2019 7:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பதவி, 21 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் விடப்பட்டதை கண்டித்து கிராம மக்‍கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆதனக்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஆயிரத்து 400 வாக்காளர்கள் உள்ளனர். இதில் கிழவனேரி, ஆதனக்குறிச்சி, ஆதனக்குறிச்சி காலனி, கண்ணன்கொட்டகை ஆகிய 4 கிராமங்கள் அடங்கியுள்ளன. ஆதனக்குறிச்சி ஊராட்சி தலைவர் பதவியை 21 லட்சம் ரூபாய்க்‍கு ஏலம் விட்டுள்ளதாகவும், அதனை ஒரு பெண்மணி ஏலம் எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஊராட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆதனக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00