அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் விழா : கோவில்களில் சிறப்பு வழிபாடு - இனிப்புகள் வழங்கல்

Dec 13 2019 10:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, அமீரகம் துபாய் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் தேய்ரா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பர்துபாயில் உள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அமீரக நிர்வாகிகள், கீழக்கரை திரு.சாதிக், பாவை மும்பாட்சா, உசிலை திரு.பா.ஆதி கிளிண்டன், திட்டக்குடி திரு.அர்ஜுனன், திரு.செய்யது அலி, திருமதி அனிலேட் நிர்மல் ஆகியோர் உடனிருந்தனர்.

வேலூர் மத்திய மாவட்ட கழகம் சார்பில், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் திரு. கே.கோபி, M.G.R மன்ற செயலாளர் திரு. ஏ.எஸ்.ராஜா ஆகியோரின் தலைமையில், வேலூர் பேருந்து நிலையத்தில் உள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில், மாவட்ட அவைத் தலைவர் திரு. எஸ்.ராஜா, அம்மா பேரவை இணை செயலாளர் திரு. ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன. வெண்ணந்தூரில் உள்ள அண்ணா சிலைக்கும், அம்மா திருவுருவ படத்திற்கும் கழகத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கழக துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான திரு.எஸ்.அன்பழகன் பங்கேற்று, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், வெண்ணந்தூர் ஒன்றியக் கழக செயலாளர் என்.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலம் மத்திய மாவட்டம் கழகம் சார்பில், சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி திருக்கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் திரு. எஸ்.வெங்கடாஜலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல், தாதகாப்பட்டி பகுதியிலுள்ள காளியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை வடக்கு ஒன்றியம் சார்பில், பிரசித்தி பெற்ற கதிராமங்கலம் வனதுர்க்கை ஆலயத்தில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. எஸ்.பி.ராஜீ தலைமையில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மணப்பாறை நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முனியப்ப சுவாமி ஆலயத்தில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், தலைமை நிலைய செயலாளாருமான திரு. ஆர்.மனோகரன் கலந்து கொண்டார். இதைத்​தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், பொன்னேரியில் உள்ள அன்புக்கரங்கள் மையத்தில் உள்ள 100 நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கப்பட்ட்து. மேலும், பள்ளி சீருடை, பாய், போர்வை உள்ளிட்டவை குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. பொன்ராஜா, கழக மீனவர் அணி செயலாளர் திரு.டி.ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், கள்ளக்குறிச்சியில் உள்ள ஐந்துமுனைச் சந்திப்பில், மாவட்ட கழக செயலாளர் திரு.கோமுகி மணியன் தலைமையில், கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், நகர செயலாளர் திரு. ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம், அந்தியூர் ஒன்றிய கழகம் சார்பில், அந்தியூர் அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், அந்தியூர் ஒன்றிய செயலாளர் திரு. கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகம் சார்பில், ஒட்டப்பிடாரத்தில் உள்ள உலகாண்ட ஈஸ்வரி ஆலயத்தில், அம்மனுக்கு 56 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், மாவட்ட செயலாளர் திரு. சுந்தர்ராஜ் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், கிருஷ்ணகிரி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு. கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகர செயலாளர் திரு. அசோக் குமார், அவைத் தலைவர் திரு. ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில், மாவட்ட கழக செயலாளர் திரு. முத்துசாமி தலைமையில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், ஒன்றிய கழக செயலாளர் திரு. ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல், கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெங்களூர் சிதம்பரத்தில், கர்நாடக மாநில செயலாளர் திரு. எம்.பி.சம்பத் தலைமையில், சக்தி கணபதி கோவிலில், விசேஷ பூஜை நடைபெற்றது. மேலும், ஏழை எளியோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில், கர்நாடக மாநில கழக துணைச் செயலாளர் திருமதி. பரமேஸ்வரி பரமசிவம் உள்ளி‌ட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00