உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழகத்தினர் வேட்புமனு தாக்கல் - அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு உற்சாக வர‍வேற்பு

Dec 13 2019 9:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊரக உள்ளாட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்வத்துடன் வேட்புமனுக்‍களை தாக்கல் செய்து வருகின்றனர்.

ஈரோடு புறநகர் மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பூதப்பாடி ஊராட்சி 9 கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், கழகத்தினர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள கழக நிர்வாகிகள், தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் ‍போட்டியிட உள்ள கழக நிர்வாகிகள் 34 பேர், தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஒன்றியக்குழு ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளில் போட்டியிட உள்ள கழகத்தினர், ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதே போல், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் கழக நிர்வாகிகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, 58 பஞ்சாயத்துகளுக்கு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கான வேட்புமனு தாக்கல் ஒரே நாளில் செய்யப்பட்டது. இதில், கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் கழக நிர்வாகிகள், தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

திருப்பூர் புறநகர் மாவட்ட, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கழக வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது, கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட ஊராட்சிகளில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிட உள்ள கழக நிர்வாகிகள், வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தளி ஒன்றியத்தில் போட்டியிட உள்ள கழக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதே போல், கெலமங்கலம், சூளகிரி, வேப்பன அள்ளி, ஓசூர் ஆகிய ஒன்றியங்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் 60 பேர், அந்தந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வெம்பாக்கம் மற்றும் அனக்காவூர் பகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கழக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலர்களிடம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர்.

தஞ்சை மாவட்டத்திற்கு 559 ஊராட்சி, பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கழகத்தின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 3 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 29 பேரும், ஊராட்சி மன்ற தலைவருக்கு 61 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00