உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களைத் தடுக்க, காவல்துறை துணையோடு பொய் வழக்குகள் போடும் எடப்பாடி அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் : ஆளுங்கட்சியினரின் சதி வேலைகளை முறியடித்து, கழகம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும் எனவும் உறுதி

Dec 13 2019 9:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களைத் தடுக்க, காவல்துறை துணையோடு பொய் வழக்குகள் போடும் எடப்பாடி அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியினரின் சதி வேலைகளை முறியடித்து, கழகம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும் எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில், தோல்வி பயத்தின் காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் கழகத்தினரை மிரட்டி பொய் வழக்கு போடும் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் ஆளுங்கட்சியினரை வன்மையாகக் கண்டிப்பதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், கழகத்தின் சார்பில், நீதிமன்றத்தை நாடி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தவிர்த்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த பழனிசாமி அண்ட் கோ, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வேறு வழியின்றி, உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது - அதுவும்கூட, ஒட்டுமொத்தமாக நடத்தாமல், இதுவரை கேள்விப்படாத வகையில், தவணை முறையில் தேர்தலை மாநிலத் தேர்தல் ஆணையம் நடத்துகிறது எனத் தெரிவத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், சட்ட விதிகளின்படி, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட பிறகும்கூட, மாநிலத் தேர்தல் ஆணையம், கழகத்திற்கு பொதுச்சின்னம் வழங்க மறுத்துள்ளது - இந்நிலையிலும், கழகத்தின் சார்பில், கழக உடன்பிறப்புகள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ளனர் - அப்படி முன்வரும் கழகத்தினரை, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு மிரட்டி, பொய் வழக்குகளைப் புனைந்து, போட்டியிடாமல் தடுப்பதற்கான வேலைகளை ஆளுங்கட்சியினர் மேற்கொண்டுள்ளதாக, கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு உதாரணமாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் 22-வது வார்டில், ஒன்றிய கவுன்சிலர் பதவியில் போட்டியிட இன்று மனு தாக்கல் செய்யவிருந்த சேரன்குளம் திரு. K. போஸ் என்கிற விஜயகுமாரை, நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் சட்டவிரோதமாக, அவரது வீடு புகுந்து அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஒருவரின் உறவினர், அதே வார்டில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அவரது வெற்றிக்கு, கழக வேட்பாளர் திரு. போஸ் தடையாக இருப்பார் என்பதால், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

திரு. போஸ் மீது, தற்போது எந்த வழக்கும் நிலுவையில் இல்லாத நிலையில், அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதைத் தடுப்பதற்காகவே, ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின்பேரில், காவல்துறையினர், சட்டத்திற்குப் புறம்பான இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர் - இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு, திரு. போஸை, உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்துவதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியினரின் இத்தகைய சதி வேலைகளை முறியடித்து, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும் என்றும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச்செயலளர் திரு. டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00