சென்னையில் இயக்‍கப்பட்ட 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் - எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்‍களும் உற்சாகம்

Dec 14 2019 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே, 164 ஆண்டுகள் பழமைவாய்ந்த நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் இன்று இயக்கப்பட்டது.

இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்த ரயில்களில் ஒன்றான இஐஆர் 21 என்ற நீராவி இன் ஜின் ரயில் சுமார் 55 ஆண்டு காலம் இந்திய ரயில்வேயில் போக்‍குவரத்துக்‍கு பயன்படுத்தப்பட்டது. காலப் போக்‍கில் அதன் பயன்பாடு குறைந்ததால், அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை கொண்டுவரப்பட்ட இந்த ரயில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை போக்‍குவரத்துக்‍கு பயன்படுத்தப்படுகிறது. 40 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த நீராவி ரயில் சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இன்று இயக்கப்பட்டது.

இந்த பாரம்பரிய இன்ஜின் ரயிலில் ஒருமுறை பயணம் செய்ய சிறுவர்களுக்கு ரூ.300, பெரியவர்களுக்கு ரூ.500 எனவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.1,000 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதோடு பயணிகளுக்கு மலர்கள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள், சிறுவர் சிறுமியர் உள்ளிட்டோர் உற்சாகமாக பயணம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00