உலகின் 2-வது பணக்காரரானார் 'டெஸ்லா' அதிபர் எலன் மஸ்க் : 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் பில் கேட்ஸ்
Nov 25 2020 11:11AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிகர சொத்து மதிப்பு ஒன்பது லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்ததை தொடர்ந்து, உலகின் நம்பர் 2 பணக்காரராக டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் முன்னேறி உள்ளார்.
டெஸ்லாவின் பங்குகள் உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். எலான் மஸ்கின் சொத்து மதிப்பு உயர்ந்ததை அடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் 3ம் இடத்திற்கு சென்றுள்ளார். 2017ம் ஆண்டு அமேசான் நிறுவனர் ஜெப் பிசோஸ் முதலிடத்திற்கு வரும் வரை பல ஆண்டுகள் பில் கேட்ஸ் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தார்.