காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மீண்டும் கொண்டு வந்த பாகிஸ்தானின் முயற்சி தோல்வி - தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியாததால் ஏமாற்றம்

Sep 21 2019 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில், காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியாமல் பாகிஸ்தான் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளது. தீர்மானத்தை தாக்கல் செய்ய 16 நாடுகளின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆதரவு இல்லாததால் பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து, மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் எழுப்ப பாகிஸ்தான், முயற்சி மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானுக்‍கு, சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. மற்ற நாடுகள், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறியதால், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

இதனிடையே, ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 42வது கூட்டத்தில், காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை மீண்டும் தாக்கல் செய்ய, கடந்த 19ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவகாசம் நேற்றுமுன்தினம் முடிவடைந்த நிலையில், பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை.

தீர்மானத்தை கொண்டுவர, குறைந்தபட்சம் 16 நாடுகளின் ஆதரவும், அந்த தீர்மானத்தில் வெற்றி பெற 24 நாடுகளின் ஆதரவும் தேவை என்ற சூழலில், தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான 16 நாடுகளின் ஆதரவு கூட கிடைக்‍காததால், பாகிஸ்தானால் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனக்‍ கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00