நாகை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் முறிந்ததால் மின் வினியோகம் பாதிப்பு

Oct 24 2019 9:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக உயர் அழுத்த மின்கம்பம் முறிந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டத்தில், நாகப்பட்டினம் மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் பலமணிநேரம் துண்டிக்கப்பட்டது. இது போல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன்காரணமாக பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளமென தேங்கி நின்றதால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.

மேலும் விழுதியூர் மானாம்பேட்டை கிராமத்தில் சூரைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையில் இருந்த உயர்மின் அழுத்த கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்தன. இதனால் நன்னிலம் செல்லும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து அதிகம் உள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள குண்டுபெரும்பேடு, தத்தனூர், பண்ருட்டி, மாத்தூர் மற்றும் எறையூர் தேவனூர் ஆகிய ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த ஏரிகளில் கடந்த சில தினங்களாக உபரிநீர் வெளியேறி வருகிறது. தேவனூர் ஏரியில் வெளியேறும் உபரி நீரில் சிறுவர்கள் மீன் பிடித்து மகிழ்ந்தனர்.

திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், பீமநகர், ஏர்போர்ட், சத்திரம் பேருந்துநிலையம், வயலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டிதீர்த்தது. இதனால் சாலையெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, வாகனஓட்டிகள் சாலையில் செல்லமுடியாமல் தவித்தனர். புறநகர் பகுதிகளான சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, துவாக்குடி உள்ளிட்ட பல இடங்களில் கனமழையும், மிதமான மழையும் பெய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00