இங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி : இந்தியர்கள் அனைவரும் வியப்பு

Oct 29 2014 7:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தில் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடிய பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் இந்தியர்கள் போல், புடவை அணிந்து தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் தீபாவளி திருநாள் கடந்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கிலாந்து நாட்டிலும் 5 நாட்கள் தீபாவளி கொண்டாடப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டரில் 5 நாட்கள் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் தனது மனைவி சமந்தா கேமரூடன் கலந்து கொண்டார். இந்துக்கள் பண்டிகையான தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 43 வயதான சமந்தா கேமரூன் வண்ணமயமான புடவை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சமந்தா கேமரூன் புடவை அணிந்து தீபாவளியை கொண்டாடியது வெளிநாட்டு பத்திரிக்கை, இணையதளங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளது. மெழுகுவர்த்தியை ஏற்றி தீபாவளி கொண்டாட்டத்தை டேவிட் கேமரூன் - சமந்தா கேமரூன் தொடங்கி வைத்தனர். பின்னர் தீபாவளி வாழ்த்து தெரிவித்த டேவிட் கேமரூன், நாட்டில் உள்ள 8 மில்லியன் இந்துக்களுக்கு தீபாவளி உரையாற்றினார். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் இந்துக்கள் அனைவரும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடினர். சமந்தா கேமரூன் சேலை அணிந்து விழாவை கொண்டாடுவது இது முதல் முறையல்ல. அனைத்து இந்துக்கள் பண்டிகை கொண்டாட்டத்தின்போதும் சமந்தா கேமரூன் புடவை அணிந்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00