அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் மொபைல்‍ போ‌ன் விவரங்களை சேகரித்ததாக எழுந்த சர்ச்சை - சவுதி அரேபிய அரசு திட்டவட்ட மறுப்பு

Jan 23 2020 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் மொபைல்‍ போ‌னை, சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் உளவுப் பார்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த குற்றச்சாட்டை, சவுதி அரேபிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் மொபைல் போன், கடந்த 2018-ம் ஆண்டு ஹேக் செய்யப்பட்டது. இதன் பின்னணியில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக, பிரிட்டனைச் சேர்ந்த தி கார்டியன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அதில், 'ஜெஃப் பெசோசுக்கும், முகமது பின் சல்மானுக்கும் இடையிலான நட்பு அடிப்படையிலான வாட்ஸ் அப் தகவல் பகிர்வின் போது, வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை, ஜெப் பெசோசுக்கு இளவரசர் முகமது பின் சல்மான் அனுப்பியுள்ளதாகவும், அதன் பின்னர், சிறிது நேரத்தில் பெசோசின் மொபைல் போனிலிருந்து ஏராளமான தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள சவுதி அரேபிய அரசு, 'ஜெஃப் பெசோஸின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் சவுதி அரேபியா உள்ளதாக வெளியான செய்திகள் அபத்தமானது என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்றதால்தான், உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜெப் பெசோசிற்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கட்டுரையாளரும், சவூதி பத்திரிகையாளருமான ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டதில் இருந்து பெசோஸ் மற்றும் சவுதி அரசுக்கு இடையேயான உறவு மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00