அமெரிக்காவில் 47 வருடங்களுக்‍குப்பின் கிடைத்த கணவரின் மோதிரம் : கணவர் இறந்தபின்பு கிடைத்த நினைவுப்பொருளால் மனைவி நெகிழ்ச்சி

Feb 18 2020 8:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
கல்லூரிப் பருவத்தில் தவறவிட்ட கணவரின் மோதிரம் 47 வருடங்களுக்கு பின் மனைவிக்கு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெப்ரா மெக்கென்னா என்ற பெண், போர்ட் லேண்டில் தனது பள்ளிப்பருவத்தில் ஒரு மோதிரத்தைத் தொலைத்துள்ளார். அது அந்தப் பெண்ணின் கணவர் ஷானின் மோதிரம் ஆகும். 47 ஆண்டுகளுக்கு முன், அந்த மோதிரத்தை ஷான், மெக்கென்னாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால், அதை மெக்கென்னா தொலைத்து விட்டார். இந்நிலையில், ஃபின்லாந்தில் உள்ள காரினா பூங்காவில், ஊழியர் ஒருவர் பூங்காவை சுத்தம் செய்யும் போது, அந்த மோதிரம் அவருக்கு கிடைத்துள்ளது. மெக்கென்னா மற்றும் ஷான் படித்த பள்ளியின் பெயர் அந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அதன் மூலம் மோதிரத்தை மெக்கென்னாவுக்கு கொரியர் அனுப்பியுள்ளனர். மெக்கென்னாவின் கணவர் ஷான் கடந்த 2017 ஆண்டு உயிரிழந்து விட்டார். இந்நிலையில், கொரியரைப் பிரித்து படித்த மெக்கென்னா, மோதிரத்தைக் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியம் கலந்த நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00